ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மகரம் ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் இருந்த ராகு ஜென்மத்துக்கு வருகிறார். 8 ஆம் இடத்தில் இருந்த கேது 7 ஆம் இடத்துக்கு வருகிறார். கதிராமங்கலம் பகுதியில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சனி 3 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் சுபவிரயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இதயம், வயிறு, முழு பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை உறவு மேன்மை அடையக்கூடிய அமைப்பு. கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். மன நிம்மதியில்லாத தன்மைகள், சிக்கல்கள் எல்லாம் நீங்கி பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும். கணவர் மனைவியின் உடல்நலனிலும், மனைவி கணவரின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துவது நல்லது. பயணங்கள், தொழிலிடத்தில், வெளியிடத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் செல்போன்களில் பேசும்போது கூட அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். யோகமும், அனூகூலமும் ஏற்படக்கூடிய காலகட்டமாக உங்களுக்கு அமையும். குரு 8 ஆம் இடத்தில் மறைந்தாலும், மிகுந்த நல்ல பலன்களையும், விசேஷத்தையும் ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படக்கூடிய அற்புதமான காலமாக இருக்கும்.மகரம்
சுபவிரயம்
தொட்டது துலங்கும்
கவனம்
வெற்றி மேல் வெற்றி