சிம்ம ராசிக்கு ராகு கேதுவால் வரப்போகும் சிக்கல்.. தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. ரொம்ப கவனம்

  • ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

    Advertisement

    கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

    ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம்

    சிம்ம ராசியினருக்கு ராகு 7 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்குப் போகிறார். கேது பகவான் 1 ஆம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்திற்குப் போகிறார். அற்புதமும், ஆனந்தத்தையும் தரும் காலகட்டம். பஞ்சபூத ஸ்தலங்களான காளகஸ்தி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், திருச்சியில் இருக்கும் திருவாணைக்காவலில் உள்ள கோயில்களுக்குச் சென்று வருவது மேன்மையைத் தரும்.

    கவனம்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். ராகு கேது மாறினாலும், 12 இல் கேது வருவதால் விலையுயர்ந்த பொருள்கள், வேலை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. மனக் குழப்பங்கள் தீராத நிலைமை இருக்கும். யோசனை, கோபம், வருத்தப்படுவது, அழுவது, உங்களையே வருத்திக் கொண்டிருப்பது போன்ற நிலைமைகள் இருக்கும்.

    Advertisement

    மாற்றம்

    குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து நல்ல மாற்றங்களும் வரும். மேலதிகாரிகளிடம் வார்த்தையை விடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தை வெளிக்காட்டமால் இருப்பது நன்மையைத் தரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரண நிவர்த்தியாகும்.

    கஷ்டங்கள் தீரும்

    கடல் கடந்த வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு என இருக்கக்கூடியவர்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பிலும், பழக்கவழக்கத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாகக் குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நன்மை பயக்கும். கால், பாதம், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வேற்று மொழி மனிதர்கள் விஷயத்தில் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மையை ஏற்படுத்தும்.

    English Summary

    Rahu Ketu Peyarchi 2026: This astrological article explains the effects of the Rahu-Ketu transit on Simmam (Leo) natives, along with remedies and important precautions.