ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம் ராசி.. ராகு கேது பெயர்ச்சியில் அடிக்கும் ஜாக்பாட்

  • ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

    Advertisement

    கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

    ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம்

    துலாம் ராசியினருக்கு ராகு பகவான் 5 இல் இருந்து 4 ஆம் இடத்திற்கும், கேது பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகவேந்திரர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்களை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வியாழக்கிழமை தோறும் தெய்வ வழிபாடுகளைச் செய்வது சகலவித நன்மைகளைத் தரும்.

    அதிர்ஷ்டங்கள்

    ராகு கேதுவால் நிறைய கெடுதல்கள் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சனி பகவான் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு 6 ஆம் இடத்தில் இருந்து பலத்தைக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 10 இல் இருந்து 11 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

    Advertisement

    தடைகள் நீங்கும்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வேலையில் இருப்பவர்கள் பேப்பர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. திருமண யோகம் ஏற்படும்.

    அனுகூலம்

    குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து மன வருத்தத்தால் பிரிந்து விவாகரத்து வரை சென்றவர்கள் மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் யோகம் ஏற்படும். பிள்ளைகள் உங்களை அரவணைத்துக் கொள்வது, நீங்கள் பிள்ளைகளை அரவணைத்துக் கொள்வது போன்ற யோகம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அவர்களுடைய ஆரோக்கியத்தில் அதிகமான கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    சிக்கல்கள் தீரும்

    அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். லாபம் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தியாகும். முதுகு, கால் ,மூட்டு தொடர்பான பாதிப்புகள் நீங்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். யோசனை செய்து கொண்டே தவிர்ப்பது, வீண் சிந்தனைகளைத் தவிர்ப்பது மேன்மையைத் தரும். சிக்கல்கள் தீரக்கூடிய காலகட்டம். தொடர்ந்து இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். அரசுத் துறை, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, யோக பலத்தைப் பெற்றுத் தரும்.

    English Summary

    Rahu Ketu Peyarchi 2026: This astrological article explains the effects of the Rahu-Ketu transit on Thulam (Libra) natives, along with remedies and important precautions.