Rajan: தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை.. கும்ப ராசிக்கு பெரிய ஆபத்து.. ஒரு வருடம் எச்சரிக்கை


  • சென்னை: கிரக நிலைகளின் மாற்றங்கள் ஜோதிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களுக்கு தகுந்தவாறு இது அனைத்து ராசிகளுக்கும் சுப, அசுப பலன்களை கொடுக்கும். திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜோதிட ரீதியாக கிரக நிலை மாற்றமும் ஒரு முக்கிய காரணம். ராஜனுக்கு கும்ப ராசி. அடுத்த ஒரு வருடம் கும்பம் ராசி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா?.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு ஜோதிட அமைப்பும் முக்கிய காரணம். ராஜன் கும்பம் ராசி, சதயம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர். கும்பம் ராசிக்கு ராகுவின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது.

    கும்பம் ராசிக்கு ஆபத்து

    கும்பம் ராசியில் பிறந்தவர்கள் அடுத்த வருடம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் 5 ஆம் தேதி வரை அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராகுவின் தாக்கத்தால் கும்ப ராசியினர் மிகுந்த மனச்சோர்வு மற்றும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பார்கள். உணர்வுகளை கட்டுப்படுத்தி பொறுமை காப்பது அவசியம்.

    யாரும் என்னை புரிந்துகொள்வதில்லை, எல்லோரும் என்னையே குறைசொல்கிறார்கள், எனக்கு யாருமில்லை என்கிற குமுறல்கள் அதிகமாக உள்ளன. கும்ப ராசியினர் உணர்ச்சிவசப்பட்ட எந்த முடிவும் எடுக்க கூடாது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான காலகட்டம் இல்லை. மேலும் பிரச்சனைகளால் வாடி தனிமையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    ராகு ஆதிக்கத்தால் சிக்கல்

    குடும்பத்தினர், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி நேர்மறையான சிந்தனையில் பயணிக்க வேண்டும். கிரக நிலைகள் மாறும் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு தான். இது நம் உணர்வுகள், முடிவு எடுக்கும் திறன் எல்லாவற்றையும் பாதிக்கும். விழிப்புணர்வும், பொறுமையும் தான் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம்.

    உறுதியான மனநிலையுடன் இருங்கள். இதுவும் கடந்து போகும். கும்ப ராசியினர் இதுதான் நம் நிலை என்று சூழ்நிலையை நினைத்து வாடிவிட கூடாது. இது நிரந்தரமானதல்ல. அடுத்த வருடத்தில் இருந்து உங்கள் வாழ்க்கை பாதை தெளிவடையும். மனதில் புத்துணர்வு ஏற்படும். படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுட்டு மகிழ்ச்சிகள் அதிகரிக்க கூடிய காலம் காத்திருக்கிறது.

    என்ன செய்ய வேண்டும்

    அதற்கு ஒரு வருடம் பொறுமையாக காத்திருப்பது அவசியம். இந்த ஒரு வருடம் உங்களின் வாழ்க்கையில் பல புதியவர்கள் வருவார்கள். இன்று உங்களை தவறாக புரிந்துகொள்பவர்கள், நாளை உங்கள் பொறுமை, மனவலிமை ஆகியவற்றை புரிந்து பாராட்டுவார்கள். யோகா, தியானம் ஆகியவற்றை தினசரி கடைபிடியுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள்.

    தேவையில்லாத சிந்தனையில் இருந்து விடுபடுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்தி மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ராகு ஆதிக்கத்தால் தேவையில்லாத குழப்பம், தனிமை, மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எல்லா பிரச்சனைக்கும் ஓர் தீர்வு உண்டு. உங்கள் பிரச்சனையைவிட உங்களின் நாளைய வெற்றி வலிமையானதாக இருக்கும்.

    English Summary

    Rajan: Cinema producer Rajan suicide creates shock over the state. Rajan belongs to Kumbam rasi. Kumbam rasi should be very careful about next one year.