மேஷம், ரிஷபம் ராசிக்கு 30 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம்.. ஜூலை மாத முழு பலன்கள்


  • ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேஷம் மற்றும் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் வரும் சில மாற்றங்களால் வேதனை கொடுத்தாலும் அதில் வெற்றிகள் உண்டாகும். பதட்டமில்லாமல் நிதானத்துடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவது நல்லது. உங்களை மிகவும் வருத்திக கொண்டு வேலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    பெரிய வெற்றி

    எல்லோருக்கும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்களை அதிகளவில் நேசிப்பது பெரிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். கஷ்டமான நிலைமைகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும்.

    கவனம்

    பற்கள் விஷயத்தில் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முருகர் வழிபாடு சகலவித ஏற்றங்களையும் தரும். சுபகாரியத்தில் இருந்த சிக்கல் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு நீங்கும். மன அழுத்தம் சரியாகும். ஏதாவதொரு யோசனை செய்து கொண்டே இருக்கும் அமைப்பு மாறும்.

    Advertisement

    வழிபாடு

    உடல் ரீதியாக, மன ரீதியாக ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளை சரிசெய்து கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையைத் தரும்.

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பணவரவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான தொற்று நோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுபவிரய பிராப்தம் அதிகரிப்பதால் செவ்வாய்க்கிழமை மதிய வேளைகளில் ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது நன்மையைத் தரும்.

    பணவரவு

    சுபவிரயத்துக்கான பணவரவு உண்டாகும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    அனுகூலம்

    தொழில் முறையாக காணப்பட்டிருந்த கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கும். நீண்டநாட்களாக இருந்து வந்த எல்லாவிதமான சங்கடங்களும் நீங்கும். குடும்ப விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாகன அமைப்பில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் பெரிய வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். துர்க்கை வழிபாடு செய்வது உங்களக்கு முன்னேற்றத்தைத் தரும்.

    English Summary

    Predictions for July: June is coming to an end, and July begins tomorrow. In this context, let us look at the predictions for the Aries and Taurus (Mesham and Rishabam) signs for the period from July 1st to July 15th.