Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். தனுசு ராசியினர் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நண்பர்களால், மனைவியால் வாழும் அமைப்பு உள்ளது. பெரிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், முதுகுத் தண்டுவடத்தில் சதை போன்று வளருவது போன்ற அமைப்பு உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இருப்பது வெளியூர், வெளிநாடு செல்வது, தூரதேச பயணம், இன்ப சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். தேவையில்லாத நட்பு, சகவாசம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்ணின் சாபம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. சூழ்நிலை நம்பிக்கை தந்தாலும் இறுதியில் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். நரம்பு, தலைவலி, பிரஷர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கழிவுப் பாதை, வயிறு, அடிவயிறு, பின்புறப் பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த எல்லவிதமான சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும், பெரிய செல்வாக்கு, அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பதட்டத்தை தவிர்க்க வேண்டும். அனுமன் சாலிஷா, நரசிம்மர் கவசத்தை கேட்பது ஏற்றத்தைத் தரும். திங்கள்கிழமை தோறும் அம்மன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சுப விரயங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருக்கும் பாதிப்புகள் நிவர்த்தியாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். நண்பர்களை தூரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 7 ஆம் இடம், களஸ்திர ஸ்தானத்தில் புதன் இருப்பதால், குரு புதன் இணைவு அற்புதத்தை ஏற்படுத்தும். வேண்டாம் என்று சொன்னாலும் நிறைய நன்மைகள் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய நம்பிக்கையும், சந்தோஷமும், ஏற்றமும் உண்டாகும். தேவையில்லாதவற்றை யோசிக்கத் தேவையில்லை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். அயோத்தியா ராமர் வழிபாடு நன்மையைத் தரும்.தனுசு
சிக்கல் வரும்
தொழில்
சுபவிரயம்
வழிபாடு