Rasi Palan This Week: கடக ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம்.. சொத்துகள் குவியப் போகுது

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு இந்த வாரம் ராஜயோகம் உண்டாகும். உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். நிறைய சொத்துகள் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீட் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

    Advertisement

    வெற்றி

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனதில் சந்தோஷமும், திருப்தியும் உண்டாகும். கெளரவம் உங்களைத் தேடி வரும். சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதால் தொண்டை எரிச்சல், கழுத்து எரிச்சல், டான்சில் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வாரத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

    அனுகூலம்

    மன அழுத்தம், பதட்டமும் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். மிகப்பெரிய வெற்றிகள் காணப்படும். உறவுகளிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மற்றவர்களுடைய தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தெய்வ பலம் ஏற்படும். இழுபறியான விஷயங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அதை நினைத்து கவலை கொள்ளாமல் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்வது நல்லது.

    வழிபாடு

    மேலதிகாரிகளிடமும், வழக்குகளிலும், கணக்குகளிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். வண்டி, வாகனங்களில் சகோதரர் செல்லும்போது கவனம் தேவை. மூளை நன்றாக வேலை செய்யும். பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு செய்வது, மிளகு, ஏலக்காய் தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நந்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the kadagam rasi people during this week of August 3 to 9 (Aadi 18 to 24).