கும்ப ராசிக்கு செவ்வாய் தரும் ராஜயோகம்!.. சொத்து சேர்க்கை, பதவி உயர்வு, வெற்றிகள் குவியும்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். முன்னேற்றங்களும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் ராஜயோகத்தைக் கொடுப்பார். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, அப்பார்ட்மென்ட் வாங்குவது, கட்டுவது போன்ற யோகங்கள் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது, மெரிட்டில் கிளியர் செய்வது போன்ற அமைப்பு உள்ளது.

    Advertisement

    பொறுமை

    நினைத்தவை எல்லாம் எளிமையாக நடக்கும் நல்ல காலகட்டம். நீங்கள் செய்யும் விஷயத்தில் கவனத்தை தாராளமாக செலுத்தலாம். உடம்பு சூடாவது, அம்மை போடுவது போன்றவை ஏற்படும். முக்கியமான வாய்ப்புகள் வந்து சேரும். மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஏற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொறுமையாக செயல்படுவது நல்லது.

    சிக்கல் தீரும்

    யோக பலத்தை அதிமாகப் பெறும் காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் சிக்கல் தீரும். உங்களுக்குத் தேவையான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மன வருத்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிகாரிகள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அரசுத் தொடர்பானவர்கள் உங்களிடம் இருந்து விலகி செல்வார்கள்.

    Advertisement

    கவனம்

    தேவையில்லாமல் மற்றவர்களைப் பகைத்துக் கொள்வதால் மன வருத்தங்கள் ஏற்படும். இளைஞர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான இளைஞர்களுக்கு அடுத்தடுத்து நன்மைகள் ஏற்படும். வயதில் முதிர்ந்தவர்கள் தவறான முடிவுகளை எடுத்து மன வருத்தம் கொள்ளும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    90 சதவீதம்

    பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சிவன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மன அழுத்தம், நியாபக மறதி, நரம்புக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ரத்த அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Kumbam rasi people during this week of August 4 to 9 (Aadi 19 to 24).