Weekly Rasi Palan: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மீன ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்களும், அனுகூலமும் உண்டாகும். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம் மற்றவர்களால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை. அலர்ஜி, ஜாயிண்டுகளில் வலி, விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஹார்மோன் குறைபாடுகள் பெண்களுக்கு ஏற்படும் அமைப்புள்ளது. நிறைய பேருக்கு சீட் கிடைப்பது, கல்லூரி அமைவது போன்ற யோகம் உண்டாகும். வேலையில் நிரந்தரத் தன்மை ஏற்படும். வெளியூர் செல்லும் அமைப்பு ஏற்படும். பூஜை, வழிபாடு போன்றவை சாதகமாக நடக்கும். பெரிய சந்தோஷமும், மேன்மையும் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். உங்களுடைய பிள்ளைகள் மூலமாக ராஜயோகம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஸ்ரீமன் நாராயணன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் என எல்லா விஷயத்திலும் ஏற்றங்கள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். துர்க்கை வழிபாடு, துர்க்கை கவசம் படிப்பது மேன்மையைத் தரும்.மீனம் ராசி பலன்
ஆரோக்கியம்
ராஜயோகம்
வழிபாடு