Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்.. காதல் திருமணம் கன்ஃபார்ம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு அருமையான காலகட்டம். எல்லா நல்ல விஷயங்களும் நடக்கக்கூடிய நேரம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் நல்ல நிலையில் உள்ளது. அண்ணன், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    வெளியூர், வெளிநாடு, வேறு ஊர், வேறு தேசம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    யோக பலன்

    யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் நிமித்தமாக ஏற்றங்கள் ஏற்படும். உறவு, நட்புகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சுபவிரய பிராப்தங்கள் உண்டாகும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும் நல்ல காலகட்டம்.

    Advertisement

    பணவரவு

    வேறு ஊருக்குச் செல்வது உங்களுக்கு ராஜ யோகத்தை தரும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நினைத்தவை நடக்கும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மற்றபடி எல்லா காரியங்களும் நடக்கும். பணம், பொருளாதாரம் நன்றாக இருக்கும். விரயங்களும் உண்டாகும். 5, 6 ஆம் தேதிகளில் நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.

    வழிபாடு

    கால் வலி, பாத வலி, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. மன அழுத்தங்கள் தீரும். குலதெய்வத்தை மானசீகமாக பிரார்த்தனை செய்வது நல்லது. விநாயகர் வழிபாடு, மன்னார்குடி ராஜகோபால சுவாமி வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Simmam rasi people during this week of August 3 to 9 (Aadi 18 to 24).