Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு செல்வாக்குகள் கூடும் அற்புதமான காலகட்டம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய யோகமான அமைப்பு. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நன்மைகள் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக எல்லா விஷயங்களிலும் நினைத்துப் பார்க்காத நிம்மதி உண்டாகும். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு பெரிய செல்வாக்கு, சந்தோஷம் ஏற்படும். பதவி உயர்வு ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு யோக பலன்களைப் பெற்றுத் தரும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எடுத்த காரியத்தில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். உத்தியோக ரீதியாக சந்தோஷம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில் ஸ்தானம் விருத்தி அடைகிறது. தொழில் ஸ்தானம் பெரிய அளவில் ஏற்றம் ஏற்படும். பெரிய அளவுக்கு வெற்றி ஏற்படும். தொழிலில் வீரியத்தையும், நம்பிக்கையையும், வெற்றியையும் கொடுக்கும். பதவிகள் வந்து சேரும். மற்றவர்கள் உதவி செய்வார்கள், முதலீடு செய்கிறோம் என்று சொல்லி உங்களை குழப்புவார்கள். மற்றபடி உங்களுக்கு எல்லா விஷயங்களும் அற்புதமாக இருக்கும். அதிக டென்ஷன், அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் வீடு கட்டுவது, இடித்து கட்டுவது, புதிதாக வாங்குவதற்கான எண்ணங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்தவற்றை நடத்தி முடிக்கக்கூடிய யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மகாலட்சுமி அனுக்கிரகம் பரிபூரணமாக உண்டு. சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் ஏற்படும்.துலாம் ராசி பலன்
அனுகூலம்
தொழிலில் ஜாக்பாட்
வெற்றி மேல் வெற்றி
வீடு கட்டும் யோகம்