Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கடக ராசியினருக்கு நிம்மதியற்ற தன்மை ஏற்படும். உடனிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், படிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், குடும்பத்தினரால் ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்வதற்கான காலகட்டம். அனுமனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. தூக்கமின்மை, அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. துணை சொல்வதை கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெற்றோர், பெரியவர்களிடம் இருந்து வந்த மன தாங்கல்களை சமூகமாகத் தீர்த்துக் கொள்வது நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இயற்கையாக இருந்து வந்த சிக்கல்களில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. சில விஷயங்களில் இறங்கிச் செல்வது நல்லது. ஒவ்வொரு விஷயங்களிலும் பார்த்து செலவு செய்வது நல்லது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் பெரிய நம்பிக்கை ஏற்படும். நிறைய வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பெரிய விருதுகள், அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். அரசு சார்ந்த விஷயங்கள் நடக்கும். உங்களிடம் பேசாமல் இருந்தவர்கள் உங்களிடம் பேசுவார்கள். அரசு சீட் கிடைக்கும். வெளிநாடுகளில் செட்டிலாகக்கூடிய யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடைய ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. நினைத்தவை எல்லாம் வெற்றி பெறக்கூடிய காலகட்டம். அற்புதமான ஆற்றல்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிவபெருமான் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.கடகம் ராசி பலன்
செல்வாக்கு
சிக்கல்கள் தீரும்
வெளிநாடு யோகம்
வழிபாடு