கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு இந்த வாரம் எப்படி?.. அதிர்ஷ்டம் கிடைக்குமா?.. வார பலன் முழு விவரம்

  • Rasi palan this week: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினர் அசிடிட்டி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவுகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வார்த்தைகளில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெரும் செல்வாக்கு, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

    நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா விதமான நன்மைகளும் அதிகரிக்கும் காலகட்டம். உடன் வேலை செய்பவர்கள், மேலதிகாரிகள், உறவுக்காரர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    சிம்ம ராசி பலன்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என நல்ல மாற்றங்கள் காணப்படும். கோபத்தினால் எல்லா விஷயங்களையும் இழக்கும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. 12 ஆம் இடத்தில் இருக்கும் கேது மன சஞ்சலத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    வலுக்கலான இடங்கள், படிக்கட்டுகளில் அதீத கவனம் தேவை. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய அமைப்பு. தொழில் ரீதியாக அனுகூலங்களை அதிகரிக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். முட்டி வலி, முதுகு வலி, மனக் குழப்பங்களில் கவனம் தேவை.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினர் காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்களுக்கான அற்புதமான காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில அதீத கவனம் தேவை. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு, உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வண்டி, வாகனங்களில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளை வெற்றிகளைத் தரும். சுப விரயங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Rasi palan this week: we look at the auspicious outcomes, remedial measures, deities to worship, and precautions to keep in mind for the zodiac sign Kadagam, simmam, kanni during the period from November 2nd to 8th (corresponding to the 16th to 22nd of the Tamil month of Aippasi).