அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. கன்னி ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் குட் நியூஸ்

  • Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கன்னி

    கன்னி ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். வசந்தம் பிறக்கும் காலகட்டமாக இருக்கும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொழில் ரீதியாக நிறைய அற்புதங்கள் ஏற்படும். வியாபாரம், படிப்பு, தொழில், உத்தியோகம் சரியாக இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நன்மைகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு.

    Advertisement

    கவனம்

    அந்தரங்க விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். துணை விஷயத்தில் கோபப்படாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்பு ஏற்படும். ஜாயிண்டு பெயின், முதுகு வலி, கால்சியம் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    தொழில்

    தொழில் ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. எடுத்த காரியங்களில் பெரிய வெற்றிகள் ஏற்படும். மன நிம்மதி ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் தொண்டை உபாதைகள், வாய்ப்புண் ஏற்படுவது, உடல் உஷ்ணம், வாய்ப்புண், கொப்பளம் வருவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு சூரியன் சேர்ந்திருப்பதால் அரசாங்கத்தில் பெரிய அளவில் பதவி கிடைக்கும்.

    Advertisement

    அரசு வேலை

    அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பெரிய ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். பக்குவத் தன்மை உண்டாகும். 8 நாட்கள் பண வரவு, பதவி உயர்வு போன்றவை இழுபறியாக இருக்கலாம். கூட இருந்தே சிலர் குழி பறிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பிள்ளைகளுடன், அப்பாவுடன் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். திட்டமிட்ட விஷயங்களில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். சில விஷயங்கள் இழுபறி ஆனாலும் அடுத்தடுத்து ஏற்றங்கள் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீத நன்றாக இருக்கும். கணபதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Kanni sign during the week of July 20 to 26 (Aadi 4 to 10).