கும்ப ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. இந்த வாரத்தில் கிடைக்கும் பலன்கள்?

  • Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்பம்

    கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பது அற்புதமான யோகத்தைத் தரும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். கிரியேட்டிவிட்டி அதிகரிக்கும். நட்பின் மூலமாக லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். கைமாற்றி விடும் யோகம் உண்டாகும். பேப்பர், புத்தகம், கணிதம், எழுத்து, ஓவியம் என எல்லா விஷயத்திலும் முதலிடத்தில் இருப்பீர்கள்.

    Advertisement

    யோகம்

    பிள்ளைகளால் சந்தோஷம், ஏற்றம் ஏற்படும். வெளியூர் யோகம் கிடைக்கும். நிலம் வாங்கும், விற்கும் யோகம் உண்டாகும், நிலத்தை விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விற்கும் யோகம் உண்டாகும். வேலையில் அதீத பளு ஏற்படும். 10 நாட்களுக்குப் பிறகு எல்லா பிரச்சனைகள் நீங்கும். பகை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 22, 23, 24 ஆம் தேதிகளில் அற்புதமான ஏற்றம் ஏற்படும்.

    சங்கடம் தீரும்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும். இழுபறியாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து பிரச்சனை தீரும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எதிரிகள் பலம் அதிகரித்துக் காணப்படுவதால் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.

    Advertisement

    கவனம்

    கழிவுப் பாதையில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாக கூட வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புரட்டாசி மாதம் வரை குடும்ப விஷயத்தில் கவனத்தோடு கையாள வேண்டும். மன அழுத்தத்தை நீங்களாகவே உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடற்பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்துவது முக்கியம்.

    வழிபாடு

    தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற 72 வயதுக்குள் இருக்கும் கும்ப ராசியினருக்கு அடுத்தடுத்து நன்மைகள் உண்டாகும். படிப்புத் தடை, உத்தியோக தடை, தொழில் தடை, வியாபார தடை பரிபூரணமாக நீங்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும்சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கம். ஸ்ரீமன் நாராயணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Kumbam sign during the week of July 20 to 26 (Aadi 4 to 10).