Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கன்னி ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு பயணங்கள், தூர பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டிகளில் பழுது, தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாப ஸ்தானத்தில் சூரியன் வருவதால் இந்த மாதம் முடிவதற்குள் பெரிய அளவில் பதவி உயர்வு, முன்னேற்றம், சம்பள உயர்வு பெறுவீர்கள். பல பஞ்சாயத்துகள் நிவர்த்தியாகும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொறுமையாக இருந்தால் நல்ல மாற்றங்கள் காணப்படும். புதன் இருக்கும் அமைப்பும் நன்றாக இருப்பதால் ஏற்றம் ஏற்படும். நீங்கள் செய்யும் விஷயங்கள் லேட்டாக நடந்தாலும் கண்டிப்பாக அதில் சாதிக்கும் யோகம் உண்டாகும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதன் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் செய்யும் வேலைகள் தள்ளிப்போய் நடக்கும். வேலையில் அழுத்தம் வந்து போகும். கால் முட்டியில் அடிபடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பல விஷயங்கள், பல நல்ல காரியங்கள் நடக்கும். எந்த காரியத்தை தொடங்கினாலும் அதனை விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டும். வாரத்தின் இறுதிப் பகுதியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. லாபம், சந்தோஷம், அனுகூலம், பிள்ளைகள், துணை விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். வெளியிடத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சவால்கள் தீரும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் கவனம் தேவை. ஐஸ்கிரீம், சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ரீதியாக 90 சதவீதமும் நன்மைகள் கிடைக்கும். ரங்கநாதர் பெருமாள் வழிபாடு, பிரத்யங்கிரா ஏற்றத்தைக் கொடுக்கும்.கன்னி ராசி பலன்
முன்னேற்றம்
கவனம்
லாபம்
வழிபாடு