Rasi Palan This Week: மகர ராசிக்கு அடுத்த 15 நாட்களில் பிரகாசமான மாற்றம்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்

  • Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மகரம்

    மகர ராசி, விருச்சிகம் லக்னத்தினர் குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையின் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடத்தில், தொழிலில், வியாபாரத்தில், படிப்பில் இருந்து வந்த தேவையில்லாத குழப்பங்கள் படிப்படியாகத் தீரும். செய்யும் காரியங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நல்லபடியாக நடக்கும்.

    Advertisement

    அனுகூலம்

    செல்வாக்குகள் கூடும் அமைப்பு உள்ளது. இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறுவீர்கள். உறவுகளில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். வேலை ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். புதிய நம்பிக்கைகள் ஏற்படும். தேவையில்லாத சங்கடங்கள் குறைவதே உங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    கவனம்

    பெரிய ஆபத்தில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். பூமி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும். பயணங்களின்போது ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அரசாங்க உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    சொத்து சேரும்

    சிவில் சர்வீஸ், நீட் கிளியர் செய்யும் யோகம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அப்பாவின் சொத்துகள், மாமியார், மாமனாரின் சொத்துகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அஷ்டமத்தில் சந்திரன், கேது, சுக்கிரன் இருப்பதால் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இளைய பருவத்தினர் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பணத்தை இழப்பது, சைபர் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    வழிபாடு

    குரு, சூரியன் இரண்டும் சேர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த வாரத்தின் இறுதிப் பகுதி நன்றாக இருக்கும். 15 நாடகளுக்குப் பிறகு பொன்னான காலகமாக இருக்கும். இதயம் தொடர்பான பாதிப்பு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிவன், பார்வதியை தினந்தோறும் மனதார வழிபாடு செய்வது நன்மைகளை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: Let us look at the favorable outcomes in store for those born under the Magaram sign during this week, from July 13 to 19.