Rasi Palan This Week: துலாம் ராசிக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமா? ஜூலை 13–19 பலன்கள் இதோ

  • Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். புதிய உத்தியோகம், வியாபாரம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். பணம் தொடர்பாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் நிறைய யோகங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    செல்வாக்கு

    கொடுத்த வாக்கை குடும்பத்தில், உறவுகளில் காப்பாற்றுவீர்கள். நிறைய ஏற்றங்கள் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பலவிதமான கஷ்டங்களும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ஸ்தானம் அபிவிருத்தியாகும். வாரத்தின் இறுதிப் பகுதியில் நிறைய பேருக்கு விருது, அங்கீகாரம், வெகுமானம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

    முன்னேற்றம்

    வேலையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். நினைத்த விஷயங்களில் வெற்றி ஏற்படும். வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும். பெரிய ஆட்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம், பொருளாதாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். வண்டி வாகனங்களில் விபத்தில் சிக்குவது, போலீஸ் விஷயத்தில் சிக்குவது போன்றவற்றுக்கு வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.

    Advertisement

    கவனம்

    17, 18 ஆம் தேதிகளில் நண்பர்கள், உறவினர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் இணைகிறது. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும் நல்ல காலகட்டம்.

    வழிபாடு

    பண வரவு நன்றாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள், சவால்கள் பரிபூரணமாக நீங்கும் வாய்ப்பு ஏற்படும் நல்ல காலகட்டம். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் அம்மன் வழிபாடு, அம்மனுக்கு கைங்கரியங்கள் செய்வது, அன்னதானம் செய்வது ஏற்றத்தை தரும்.

    English Summary

    Rasi Palan This Week: Let us look at the favorable outcomes in store for those born under the Thulam sign during this week, from July 13 to 19.