Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு வார இறுதியில் காத்திருக்கும் சிக்கல்

  • Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    விருச்சிகம்

    விருச்சிகம் ராசி, விருச்சிகம் லக்னத்திற்கு இந்த வாரத்தில் நற்பலன்கள் அதிகளவு கிடைக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் காணப்படும். தடைபட்டிருந்த விஷயங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் கிடைக்கும். சிக்கல்கள் படிப்படியாக தீரும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

    Advertisement

    வெளிநாடு வாய்ப்பு

    வெளிநாடு, வெளிமாநில வாய்ப்புகள் கைக்கூடி வரும். ஆடி மாதம் தொடங்கிய பிறகு இன்னும் அருமையாக இருக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழிலில் இருப்போருக்கு இன்னும் அற்புதமாக இருக்கும். தந்தை வழி சொத்துகள் தேடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வித்துறையில் நல்ல பணியை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

    வார இறுதியில் கவனம்

    வார இறுதியில் உத்யோகத்தில் சிக்கல்கள் ஏற்படும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின்போது புதிய நபர்களிடம் அறிமுகம் ஆகும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். வங்கி பரிவர்த்தனை விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏழாம் இடத்தில் செவ்வாய், சந்திரன் இருப்பதால் சின்ன சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அம்மா, அப்பா உடல்நலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரகம் பிரச்சனைகள் இருப்போர் உரிய பரிசோதனை செய்வது முக்கியம். ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை தேவை. அவ்வபோது சோம்பலாக இருக்கும். மனைவியுடன் வாக்குவாதம் வேண்டாம். வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் நிதானத்தை கடைபிடிக்கவும். புதன்கிழமை பெருமாள், மகாலட்சுமி வழிபாடு செய்வது அவசியம்.

    English Summary

    Rasi Palan This Week: Let us look at the favorable outcomes in store for those born under the Viruchigam sign during this week, from July 13 to 19.