மீன ராசிக்கு வசந்த காலம் தொடக்கம்.. எதிர்பாராத குட்நியூஸ், தொழிலில் முன்னேற்றம், பணவரவு

  • Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மீனம்

    மீன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    முன்னேற்றம்

    வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். அனுகூலம் ஏற்படும். நிலம், விவசாயம், கால்நடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆதாயம் ஏற்படும்.

    குட்நியூஸ்

    வசந்தங்கள் பிறக்கும் அற்புதமான காலகட்டம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த மன தாங்கல்கல் தீரும். உங்களுடைய ஆரோக்கியம், பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. முதுகு தண்டுவடம் சாரந்த பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

    Advertisement

    ஆரோக்கியம்

    பண விஷயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. 3 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது ஒருவிதத்தில் நன்மையைத் தரும். அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனை, கை வலி, கால் வலி, இடது கை சம்பந்தப்பட்ட வலி, மனதில் ஒருவிதமான நிம்மதியின்மை, கோபப்படுவது, டென்ஷனாவது போன்றவை இந்த ஒரு வாரம் இருக்கும். வீட்டில் சந்தோஷம் ஏற்படும். மாடித் தோட்டம், செடிகள் வைப்பது போன்ற யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    வீட்டை அலங்காரப்படுத்துவது, தோரணம் கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஆண்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முருகனை மனதார வழிபாடு செய்வது சகலவித நன்மையைத் தரும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Meenam sign during the week of July 20 to 26 (Aadi 4 to 10).