Rasi Palan This Week: ராஜயோகம் பெறும் மேஷ ராசி.. இந்த வாரம் எப்படி இருக்கும்?.. முழு பலன்கள்

  • Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டம். சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் விஷயத்தில் நிறைய ஏற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.

    வெற்றி மேல் வெற்றி

    எடுத்த காரியங்களில் பெரிய வெற்றிகள் பெறக்கூடிய யோகம் உண்டாகும். நிலம், வீடு, பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்வீர்கள். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்புக்காக செல்ல முயற்சிப்பவர்களுக்கு தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அஜீரண கோளாறுகள், பல் பாதிப்புகளில் கவனம் தேவை. தேவையில்லாத பதட்டங்களைத் தவிர்க்கவும். நல்ல ஓய்வெடுப்பது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Aries sign during the week of July 20 to 26 (Aadi 4 to 10).