Rasi palan this week: நவம்பர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 16 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, நவம்பர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 16 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷம் ராசியினருக்கு உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இருப்பினும், கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயத்திலும் பயப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு, மற்றவர்கள் விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய சுப காரியங்களும், ஏற்றமும் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். நல்ல வேலை ஆட்களை இழக்காமல் அவர்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, பழக்கவழக்கங்களில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். வர வேண்டிய பணம், பாக்கிகள், சொத்துக்கள் அனைத்தும் வந்து சேரும். ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் யோகம் ஏற்படும். இடுப்பு வலிகள், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் வந்து போகும். 5 ஆம் இடத்திற்கு குரு வருவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய சந்தோஷத்தைப் பெறக்கூடிய காலகட்டம். முக்கியமான விஷயங்கள் சாதாரணமாக நடக்கும். வெளியூர் செல்லும் யோகம் உண்டு. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். முருகனை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்மைகளைத் தரும்.மேஷம் ராசி பலன்
ஆரோக்கியம்
பணவரவு
வழிபாடு