அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. ரிஷப ராசிக்கு அரசு வேலை கன்ஃபார்ம்.. பொறுமை ரொம்ப அவசியம்

  • Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும். சந்தோஷமும், பணவரவும் அற்புதமாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆடி பூரத்தில் நிறைய நல்லவற்றை வாங்கி மகிழ்வீர்கள். காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உறவினர்கள், துணை விஷயத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.

    Advertisement

    முன்னேற்றம்

    குடும்பத்திற்குத் தேவையான விஷயங்களை எல்லாம் மேற்கொள்வீர்கள். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள், அடுத்தடுத்து சுப காரியங்களைச் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்து மகிழ்வீர்கள். எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படுத்தும்.

    சிக்கல் தீரும்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கை பெறுவீர்கள். உத்தியோகத்திலும், தொழில் ரீதியாகவும் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடை, தாமதங்கள் பரிபூரணமாக நீங்கும். பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது.

    Advertisement

    அரசு வேலை

    பேச்சுத் திறமை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு நல்ல விஷயங்கள் நடைபெறும் யோகம் உள்ளது. காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் தொடர்பான விஷயங்களில் பிள்ளைகள் தேர்வாகக்கூடிய அமைப்பு உள்ளது. வெளியூர், வெளி மாவட்டங்களில் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு.

    வழிபாடு

    எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். சனி வக்கிரமாக இருப்பதால் ஒரு சில விஷயங்களில் எடுக்கும் முடிவுகள் சாதகமில்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. கோபம், ஆக்ரோஷத்தை தவிர்ப்பது நல்லது. முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது மாற்றத்தையும், ஏற்றத்தையும் தரும். வேலையில் குடைச்சல், மன அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அவசரமில்லாமல் பொறுமையாக நடப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Rishabam rasi people during this week of July 27 to august 2 (Aadi 11 to 17).