ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம்.. புது வீடு, புது கார், புது நிலம்னு செட்டிலாகும் யோகம்

  • Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம்

    துலாம் ராசியினருக்கு உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவித நல்ல மாற்றங்களும் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.

    Advertisement

    வீடு, நிலம் வாங்கும் யோகம்

    யோகத்தை அதிகமாகப் பெற்றுத் தரக்கூடிய நல்ல காலகட்டம். புதிய தொழில், புதிய விஷயங்கள், புதிய படிப்புகள் போன்றவை ஏற்படும். வண்டி வாகனங்களை வாங்கும் அமைப்பு உள்ளது. வீடு கட்டும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவது மன அழுத்தத்தை தீர்க்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் உண்டாகும்.

    வெளிநாடு யோகம்

    பஞ்சம ஸ்தானத்தில் ராகு, பாக்கிய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேரும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நிறைய நல்லவை நடக்கும். எல்லா விஷயங்களும் அற்புதமாக நடக்கும். 10 ஆம் இடத்தில் குரு, சனி, சூரியன் அமர்ந்திருக்கிறது. கால் முட்டி, எலும்பு தேய்மானம், பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    Advertisement

    வழிபாடு

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் பிரச்சனை, சண்டையைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு தேவையில்லாத ஆலோசனைகளை கொடுப்பதால் பிரச்சனைகளில் சிக்கும் நிலை ஏற்படும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Thulam sign during the week of July 20 to 26 (Aadi 4 to 10).