“சும்மா அதிருதில்ல”.. தனுசு ராசிக்கு 95% நன்மைகள்.. மாஸ் காட்டப் போறீங்க

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.

    Advertisement

    சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பெரிய பண வரவு வந்து சேரும். நிறைய டீலிங் பேசி முடிப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில், உத்தியோகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் வாழ்க்கையில் பெரிய அளவில் செட்டிலாகும் யோகம் உண்டு.

    Advertisement

    வெற்றி

    எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். எந்த முதலீடுகளை செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்கள் மேலான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை கூடும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    யோகம்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு. உறவுமுறையில் இருந்த சிக்கல் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். புதன்கிழமையில் பெருமாள் தாயார் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். ஞாயிற்றுக்கிழமையில் பசு மாடுக்கு கோதுமையும், வெல்லமும் கலந்து தருவது தடைகள் நீங்கும். லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும்

    Advertisement

    குட்நியூஸ்

    தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். வசந்தங்கள், தடைகள் தவிடு பொடியாகும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த சகலவித சங்கடங்கள் நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த சிக்கல் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    மாற்றம், முன்னேற்றம்

    இடமாற்றம், தொழில் மாற்றம், ஆன்மீக மாற்றம் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். உறவுகள், நண்பர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தினந்தோறும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது மேன்மையை ஏற்படுத்தும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Dhanusu rasi may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.