ராஜயோகம் பெறும் தனுசு ராசி.. உங்க காட்டுல பண மழை கொட்டப் போகுது.. என்ஜாய்

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். தடைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளதால் கோளார் பதிகத்தை சொல்வது நல்லது. பித்ரு தோஷம் காணப்படுவதால் பெற்றோர் பெரியோரின் மனம் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

    பணவரவு

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அற்புதமாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமா நீங்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.

    Advertisement

    பிரச்சனை தீரும்

    வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். 10 ஆம் இடம் நன்றாக இருப்பதால் வாரத்தின் இரண்டாம் பகுதி அற்புதமாக இருக்கும். 14 ஆம் தேதியில் இருந்து நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அழுத்தம் தீரக்கூடிய காலகட்டம். அலுவலக ரீதியாக இருந்து வந்த அழுத்தங்கள் தீரும். தேவையில்லாத வன்மங்கள் தீரும். பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.

    யோகம்

    அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் செய்யும் விஷயங்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அவை நன்றாக முடிக்கும் அமைப்பு உள்ளது. பெரிய யோகத்தைக் காணக்கூடிய காலகட்டம். அஷ்டமத்தில் குரு, செவ்வாய் தாண்டும் வரை அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. 3 ஆம் இடத்தில் ராகு இருப்பது சரியாக திட்டமிட்டு உங்களை ஜெயிக்க வைக்கும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    வழிபாடு

    போலீஸ், வழக்குத் தொடர்பான பிரச்சனைகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டம். பசு மாடுகளுக்கு உணவு, தானம் கொடுப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். அரங்கநாதர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Dhanusu Weekly Rasi Palan for October 12–18 predicts career growth, business improvements, property gains, success in new ventures, and positive changes, with guidance on worship and remedies.