Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. நல்ல நேரம் ஆரம்பம்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் பழைய பஞ்சாயத்துகள், பழைய பிரச்சனை, நண்பர்கள், வழக்குகள் என எல்லா பழைய பிரச்சனைகளும் தீரும். கடன்களை அடைத்து முடிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய லோன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களிடம் நெருங்கிய நட்பு பாராட்டுவார்கள்.

    முயற்சிகளில் வெற்றி

    நிறைய பேருக்கு பெரும் பொறுப்புகள் ஏற்படும். சிலருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு ஒரு பெரும் அதிகாரியால் நல்லது நடக்கும். நிறைய பரிசுப் பொருள்கள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எந்த விஷயத்துக்கு முயற்சி செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷமான பலன்களை அதிகமாக கொடுக்கக்கூடிய காலகட்டம்.

    Advertisement

    அனுகூலம்

    தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தொடை, கால், முட்டி, பாதங்கள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

    லாபம் கொட்டும்

    வைர நகைகளை சேர்க்கத் தொடங்குவீர்கள். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் ரீதியாக இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். செல்வாக்கும், பெரும் வெற்றிகளும் ஏற்படக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். லாபத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    வழிபாடு

    சுப காரியத்தில் இருந்த சிக்கல் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராமபிரான் வழிபாடு பெரிய ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் அற்புதத்தை ஏற்படுத்தும். 26, 27 ஆம் தேதிகள், 30, 31 ஆம் தேதிகள் அற்புதமான நாட்களாக உங்களுக்கு இருக்கும்.

    English Summary

    Rasi palan this week: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Dhanusu (Sagittarius) sign during the period from October 26 to November 1.