Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். தனுசு ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் அமர்ந்திருப்பதால் வேலையில் கடுமையான அழுத்தம் ஏற்படும். நிறைய பேர் வன்மத்தோடு செயல்படுவார்கள். நண்பர்கள் உங்களை காப்பாற்றுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குரு அதிசாரமாக மாறுவதால் உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள், சுப காரியங்கள் நடக்கும். முக்கியமான கடன் கிடைக்கும். கார் வாங்கும் யோகம் ஏற்படும். முழு சந்திர பலத்தோடு இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வயிறு உபாதைகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நிறைய நல்ல விஷயங்கள் ஐப்பசி மாதம் வரை நடக்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த மன சங்கடங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். 8 இல் செவ்வாய், குரு இருப்பதால் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. ரத்த பந்த உறவுகளுக்கு உதவி செய்யக்கூடிய பாக்கியம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு, அனுகூலம் காணப்படும். தொடர்ந்ச்சியாக இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் பெரிய சந்தோஷங்களும், ஆச்சரியமான முன்னேற்றங்களும் ஏற்படும். திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்துவது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.தனுசு ராசி பலன்
கார் வாங்கும் யோகம்
சங்கடம் தீரும்
அனுகூலம்
வழிபாடு