Dhanusu: தனுசு ராசிக்கு அஷ்டமத்தில் 3 கிரகங்கள்.. வேலை விஷயங்கள் வரப்போகும் சூப்பர் மாற்றம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். அஷ்டமத்தில் 3 கிரகங்கள் இருப்பதால் இரண்டாவது வேலைகள், புதிய கிடைக்கும். எல்லா விஷயங்களும் வேகமாக நடக்கும். சொந்தபந்தங்களால் பிரச்சனைகள் வந்து போகும். கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. 3 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் ஒருவிதமான தைரியம் இருக்கும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலைகள், உறவுகள் ஏற்படும். மன வருத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். மன வருத்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    முன்னேற்றம்

    தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். ஏற்றங்கள் அதிகரிக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டு. சுப விரய பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் நிறைய அனுகூலங்கள் கிடைக்கும்.

    Advertisement

    நிலம், வீடு யோகம்

    எந்த விஷயத்திற்கும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவது, மற்றவர்களுக்காக நிற்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உறவுக்குள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் காலகட்டம். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதங்கள் உண்டாகும்.

    வழிபாடு

    விநாயகர், நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பிரச்சனைகள் எல்லாம் மாறும் காலகட்டமாக இருக்கும். பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சந்தோஷம், முன்னேற்றம் ஏற்படும். பெருமாள வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட நிறம் பிங்க். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Dhanusu rasi people during this week of August 10 to 16.