Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். தனுசு ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது தடைகளை தவிடு பொடியாகும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் சந்தோஷம் ஏற்படும். இந்த வாரம் அருமையான வாரமாக இருக்கும். 10 இல் ஒரு பாவி இருக்கிறார். கன்னி ராசியில் புதன் வந்து கன்னி ராசியில் பலமாக அமர்ந்திருக்கிறார். சுக்கிரனும் ஆட்சி பலத்தில் அமர்ந்திருக்கிறார். 10, 11 ஆம் இடம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வேலையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படும். 2, 3 வேலை கிடைக்கும். பெரிய மாற்றங்கள் உண்டாகும். அலுவலகம் ரீதியாக நல்ல பொறுப்புகள் வந்து சேரும். எழுத்து, மாத்திரை, பள்ளி, கல்லூரிகளில் வேலை கிடைப்பது, ஐடி துறையில் டேட்டா தலைமைப் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் பலமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள், நண்பர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சேரும். பெரிய அளவில் லாபம், வெற்றியும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு காரியத்தை முடிப்பீர்கள். எந்த முயற்சியாக இருந்தாலும் பெரிய அளவு வெற்றியும், மாற்றங்களும் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் உண்டாகும். ருத்ரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும் துணை விஷயத்தில் இருந்து வந்த மன கஷ்டம், பண கஷ்டம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பைரவர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். அம்பாள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.தனுசு ராசி பலன்
வேலை கிடைக்கும்
லாபம், வெற்றி
முன்னேற்றம்
வழிபாடு