தனுசு ராசியினரே.. இப்போ கொஞ்சம் பொறுமை மட்டும்!.. அக்டோபருக்கு பிறகு ராஜவாழ்க்கை

  • Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் நடக்கும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் அதிகமாக ஏற்படும். இருப்பினும், அதற்கேற்ப நல்ல வருமானம் உண்டாகும். உறவு மற்றும் நட்புகள் வீட்டுக்கு வந்து செல்வார்கள். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

    முடிவுகளில் வெற்றி

    துணையை மட்டும் காயப்படுத்துவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்வார்கள். அவர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளால் பாராட்டு பெறுவீர்கள். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    வேலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். போராட்டத்தைக் கொடுக்கும். வேலையே வேண்டாம் என்கிற நிலைமை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொடைப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். உணவால் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது.

    கவனம்

    அஷ்டமத்தில் குரு, 10 ஆம் இடத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் ஒரு மாதத்திற்கு குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய விஷயங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வங்கி தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு மாதத்திற்கு சிறிது அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.

    Advertisement

    தொழில்

    வேலையில் சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. பிரஷரை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிக பிரஷர் இருந்தால் விடுமுறை கூட எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால், வேலையை மட்டும் விட்டு விடாமல் இருப்பது நல்லது. அக்டோபர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ராஜவாழ்க்கை, அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். றவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும்.

    வழிபாடு

    இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் வேண்டாம். நிதானம், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கால், கழுத்து, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Dhanusu Rasi Weekly Horoscope: Dhanusu (Sagittarius) natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.