Dhanusu: வேலையை விடலாமா? தொடரலாமா?.. தனுசு ராசிக்கு இந்த வாரம் நடக்கும் முக்கிய மாற்றம்

  • Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வேலையை விடலாமா, தொடரலாமா என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். மேலதிகாரிகளின் டார்ச்சருக்கு யோசித்து வேலையை விடலாம் என்கிற சிந்தனையைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி தொடர்பான பாதிப்புள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    மூன்றாம் இடம் மிகவும் வலிமையாக இருப்பதால் அசுர பலம் ஏற்படும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் என்பதால் எல்லா விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு எதிராக நிறைய விஷயங்களை சிலர் செயல்படுத்துவார்கள் என்பதால் கவனம் தேவை. படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் 6 மாதமாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

    Advertisement

    மாற்றம், முன்னேற்றம்

    மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் எல்லாமே தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.

    அனுகூலம்

    பயணங்களால் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். மனதில் தேவையற்ற சிந்தனைகளும், குழப்பங்களும் வரும். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அலுவலகங்கள், தொழிலில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பரிகாரம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறு சிறு சிக்கல்கள் வந்து நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் மதியம் தோறும் அன்னதானம் கொடுப்பது நல்ல நன்மைகளைத் தரும். சுபவிரயங்கள் ஏற்படும். அபிராமி அந்தாதியைப் படிப்பது மன நிம்மதியை ஏற்படுத்தும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Dhanusu (Sagittarius) sign during the period from September 21 to September 27 (Purattasi 4 to 10).