Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கடகம் ராசியினருக்கு நிறைய நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. துணை விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேருவீர்கள். தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். அரசு உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு எதிராக மாறுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. சனி வக்கிரமாக இருப்பதால் அஷ்டமத்தில் இருக்கும் பலனைத் தரும். அதனால், யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. சந்திரன், செவ்வாய், குரு, சனி வக்கிரம் என 4 கிரகங்கள் செல்வதால் நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டாலும் ஆரோக்கியத்தில், வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலையில் நீர் கோர்ப்பது, தொண்டை உபாதைகள், கழுத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சொத்துக்கள், பொருளாதாரத்தில், குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களை மாற்றுவீர்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள். குடும்பத்துக்குள் வராத பணம், நிலம் போன்றவற்றை கிடைக்கும். எல்லா வகையிலான பிரச்சனைகளையும் பேசி முடிப்பீர்கள். போலீஸ் வழக்குகள் இந்த வாரம் முடியும். ஏற்றங்கள் காணக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்கிரம், 4 ஆம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் கண்டிப்பாக வீடு வாங்குவீர்கள். பூர்வீக நிலம், சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உண்டு. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்வது நல்லது. அருகில் இருக்கும் நீர்நிலைகளில் குளிப்பது நன்மையைத் தரும்.கடகம் ராசி பலன்
முன்னேற்றம்
கவனம்
புதிய வாகனம்
வீடு வாங்கும் யோகம்