காசு பணம் துட்டு மணி மணி.. கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. என்ஜாய்

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்ப ஸ்தானத்துக்கு பலம் பெறக்கூடிய காலகட்டம். சுக்கிரன் வக்கிரமடைவதால் பழைய பணங்கள் வந்து சேரும். வராத பணங்கள் வரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியம், ஆயுள் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

    பணவரவு கொட்டும்

    நிறைய பேர் புதிதாக ஏதாவது வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். தொடர்ந்து ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. வாரத்தின் இரண்டாம் பாதியில் இருந்து நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மனமே மிகுந்த சந்தோஷத்துடன் காணப்படும்.

    Advertisement

    சிக்கல்கள் தீரும்

    சுக ஸ்தானத்துக்கு சந்திரன் போகும்போது நிறைய சந்தோஷம் ஏற்படும். சுற்றுலா செல்வதற்கான யோகம் பெறுவீர்கள். கோயில்கள், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்லம் அமைப்பு உள்ளது. உங்கள் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் அமோகமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும்.

    வழிபாடு

    குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளிடம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள், தாயாரை வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும்.

    Advertisement

    பரிகாரம்

    ஞாயிற்றுக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பது, வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kanni (Virgo) sign during the period from october 12 to 18 (Purattasi 25 to Aippasi 1).