கொட்டும் பணம்.. திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் அந்நியோன்யமாக இருப்பது நன்மை பயக்கும். விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம், வியாபார மாற்றம் என்று எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். அலர்ஜி தொந்தரவால் தேவையில்லாத மனக்கசப்பு, சங்கடங்கள் ஏற்படும்.

    யோக பலன்

    வேற்றுமொழி மனிதர்களால் அதிகமான ஆதயங்களும், அனுகூலங்களும், வெற்றியும் ஏற்படும். சுப விரயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுவாசத்திலும், உடலிலும் அலர்ஜி வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். கொடுத்த பணம், பாக்கிகளை வசூல் செய்வீர்கள். மனைவிக்கு நெக்லஸ் வாங்கி கொடுப்பீர்கள். வீட்டில் ஆடம்பரப் பொருள்களை வாங்கித் தருவீர்கள். சேமிப்பு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பீர்கள். விரயத்தில் செவ்வாய் குரு, லாபத்தில் செவ்வாய் குரு உள்ளது.

    முயற்சிகளில் வெற்றி

    அதிர்ஷ்ங்கள் சேர்ந்து வரக்கூடிய காலகட்டம். பின்புறப் பகுதி, எலும்புப் பகுதிகளில் பாதிப்பு, சைலன்ஸர் காலில் படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குள் பெரிய மாற்றங்கள் ஏற்படும். கன்னி ராசிக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எல்லா முயற்சிகளும் நல்லபடியாக நடக்கும்.

    Advertisement

    பணவரவு

    பணம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். மன வலிமை அதிகரிக்கும். சந்தோஷம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகம் சேர்ந்திருப்பதால் யோகத்தைப் பெறுவீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கெளரவம் அதிகரிக்கும். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.

    வழிபாடு

    நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சுப விரயங்கள் அதிகமாகச் செய்வீர்கள். பெரிய ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் காணக்கூடிய அற்புதமான காலகட்டம். முயற்சி செய்தால் எல்லாவற்றிலும் ஜெயிக்கக்கூடிய காலகட்டம். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் அற்புதமாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kanni (Virgo) sign during the period from October 26 to November 1.