கன்னி ராசிக்கு இந்த வாரம் செம அதிர்ஷ்டம்.. என்னென்ன யோகங்கள் கிடைக்கும் தெரியுமா?

  • Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினர் உறவுகள் விஷயத்தில், குடும்பத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணை விஷயத்தில் ஆக்ரோஷம், கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களை அடுத்தடுத்து முடிப்பது நல்லது. பெரும் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நரம்பு, கண், நடுக்கம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    கவனம்

    நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். உங்கள் குடும்ப விஷயத்திலும், பிறர் குடும்ப விஷயத்திலும் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    அனுகூலம்

    மூத்தவர்களால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. கால்முட்டி, தூக்கமின்மை ஏற்படும். பெரியவர்கள், மூத்த மகனால் பிரச்சனைகள் வந்து சேரும். சைனஸ், மைகிரைன் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் பேரக் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டு. காதல் திருமணம் செய்து உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அரசியலில் வெற்றி வரும் வாய்ப்புள்ளது.

    முன்னேற்றம்

    அரசாங்க உத்தியோகத்தில், பொறுப்பில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் நிறைந்த காலகட்டம். பெரிய அளவுக்கு நிம்மதியும், பொறுப்பும் வந்து சேரும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சிறிய சிறிய விஷயங்களுக்கும் கோபப்படுவீர்கள். டென்ஷன், பிரஷரை பார்த்துக் கொள்ள வேண்டும். நகை வாங்கும் யோகம் உண்டு.

    Advertisement

    வழிபாடு

    செல்போன் போன்றவற்றை வாங்கும் அமைப்பு உள்ளது. பெண்களுக்கத் தேவையான விஷயங்களை வாங்குவீர்கள். பயணங்களின் போது ஆண் ராசியினர் பெண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை தோறும் பெருமாள், தாயாரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kanni (Virgo) sign during the period from September 28 to October 4 (Purattasi 11 to 17).