Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு லாபம், சந்தோஷம் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிக சம்பளத்திற்குச் செல்லும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம், நன்றாக இருக்கும். படிப்பில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள், சிக்கல்கள் எல்லாம் தீரும். கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். வேலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். பேராசிரியராக கூடிய யோகம் கிடைக்கும். விருதுகள், அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றங்களாக இருந்தாலும் தடை, தாமதமின்றி நடக்கும். சனி வக்கிரமாக இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய நல்லவை நடக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் உண்டாகும். தேங்கிக் கிடந்த விஷயங்கள் நடக்கத் தொடங்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழனி முருகன் வழிபாடு, மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மலைக் கோயில்களுக்குச் சென்று வருவது, குலதெய்வத்தை வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும். சந்தோஷம், பொருளாரத்தில் 90 சதவீதம் நன்மைகள் கிடைக்கும்.கன்னி ராசி பலன்
யோக பலன்
லாபம் கொட்டும்
வழிபாடு