கன்னி ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. வீடு, நிலம் வாங்கும் யோகம்.. 2 விஷயங்களில் மிக கவனம்

  • Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும்.

    வாக்குவாதம் வேண்டாம்

    கணவன், மனைவி இருவரும் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில், வியாபாரம், வேலை செய்யும், இடம், பயணம், அக்கம்பக்கத்தினர் என யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். சூரியன் ராசியில் இருப்பது, சனியின் பார்வையில் இருப்பது, சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது, லக்கினத்தில் ராசியாதிபதி சேர்ந்திருப்பதால் கவனம் தேவை.

    Advertisement

    திடீர் அதிர்ஷ்டம்

    நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி, வாகனத்தில் கவனம் தேவை. வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    பிடிவாதத்தை தவிர்க்க வேண்டும். தர்மத்திற்கு எதிரான காரியங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த ஒரு மாதத்திற்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன வேதனை ஏற்படும். சண்டை, சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை நடப்பதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    Advertisement

    வழிபாடு

    சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது, அது சம்பந்தப்பட்ட நபர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. வீடு வாங்கும்ய யோகம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். சரஸ்வதி தேவி வழிபாடு விநாயகர், அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கண், கழுத்து பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kanni (Virgo) sign during the period from September 21 to September 27 (Purattasi 4 to 10).