கும்ப ராசிக்கு அடுத்த 4 மாதங்கள் அதிர்ஷ்டம்.. வீடு வாங்கும் யோகம்.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கும்ப ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினர் பல பிரச்சனைகளில் இருந்தும், பாதிப்புகளில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். அடுத்த 4 மாதம் பிரம்மாண்டமான மாற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனம் தெளிவடையும், குழப்பமாக இருந்த மனநிலை மாறும். தெளிவாகவும், நேர்மறையாகவும் சிந்திக்கக்கூடிய தன்மை ஏற்படும்.

    முயற்சிகளில் வெற்றி

    மற்றவர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களில் இருந்தெல்லாம் இப்போது விடைபெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு குழி பறித்த நிலைமை எல்லாம் மாறும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வரும் 4 மாதங்கள் உங்களுக்கு நேர்மறையாக இருக்கும்.

    Advertisement

    வீடு வாங்கும் யோகம்

    எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்ட காரியங்கள் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். வீடு விற்பது, வாங்குவதற்கான அற்புதமான யோகம் ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யக் குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சிக்கல் நீங்கும்

    துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதி, தோள்பட்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பெரும் செல்வாக்கு ஏற்படும் காலகட்டம். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    Advertisement

    வழிபாடு

    ஆரோக்கியத்தில் அதீத அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொள்ளாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. 4 மாதங்களுக்கு தினந்தோறும் துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi palan this week: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kumbam (Aquarius) sign during the period from October 26 to November 1.