கும்பம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

  • Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

    அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தர்க்கங்களைத் தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருக்கும் காரியங்களால் தேவையில்லாத பதட்டம் ஏற்படும்.

    நம்பிக்கை

    உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் நம்பிக்கை ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகம் ரீதியாக பெரும் சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. துணையின் ஆரோக்கியத்தை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மறைமுக நோய் பாதிப்புகள், தொற்று நோய் பாதிப்புகள் திடீரென அதிகரிக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக சிறிது சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    திடீர் அதிர்ஷ்டம்

    மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வது, விரதம் இருப்பது நன்மை பயக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரியவர்களால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட, அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    வயிறு உபாதைகள், வேலையில் உள்ள டென்ஷன், பணி அழுத்தம் போன்றவை இருக்கும். இஎம்ஐக்கள் சென்று கொண்டிருப்பதால் அவற்றை பார்த்து சமாளிப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் நிறைய பேருக்கு குடும்பம் அமையும். பெரிய முன்னேற்றத்தைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிறைய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். டிசம்பருக்குப் பிறகு 3 மாதம் அருமையாக இருக்கும்.

    மதிப்பெண்

    பயணங்களின் போது சிறிது கவனமாக இருப்பது நல்லது. சிதம்பரம் நடராஜரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kumbam (Aquarius) sign during the period from October 5 to 11 (Purattasi 18 to 24).