கும்ப ராசிக்கு குவியும் அதிர்ஷ்டம்.. இந்த வாரம் செம குட்நியூஸ் காத்திருக்கு!

  • Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதியான இன்று மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம் ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் இருக்கின்றனர். நட்பு வட்டாரங்கள் மூலம் சந்தோஷம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதிய இடங்களுக்குச் செல்லும் அமைப்பு. சந்தோஷமாக இருப்பீர்கள். பொறுப்புகள் கூடக்கூடிய காலகட்டம். எல்லா விஷயங்களும் தடையில்லாம் நடக்கும் அமைப்பு.

    பணவரவு

    வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம், செலவு, கடனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களால் மிகுந்த பிரஷர் உண்டாகும். ஆனால், 3 ஆம் இடம் நன்றாக இருப்பதால் மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரன், சகோதரிகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருப்பது பண வரவு அற்புதமாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    Advertisement

    திருமண யோகம்

    திருமண யோகமும், மறுமண யோகமும் நிறைய பேருக்கு ஏற்படும். வீடு, நிலம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களையும் பெரிதாக சிந்திப்பீர்கள். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல சாதகமான அமைப்பு காணப்படும். தேவையில்லாதவர்களை பகைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

    கவனம்

    மேலதிகாரிகள், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகம், வியாபாரம், தொழில், மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வயதில் முதிர்ந்தவர்கள் வழுக்கல் பகுதிகள், உயரமான இடங்களில் கவனம் தேவை.

    Advertisement

    குட்நியூஸ்

    எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுமுறையில் இருந்த சிக்கல் தீரும். உள்ளூர், வெளியூர் என இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். பெருமாள், தாயார் வழிபாடு, அகோர வீரபத்திரர் வழிபாடு சகலவித நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Kumbam (Aquarius) sign during the period from September 28 to October 4 (Purattasi 11 to 17).