Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கும்பம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். உறவுக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். வெள்ளிக்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது யோகத்தைத் தரும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவோரிடம் பழகுவதை தவிர்ப்பது நல்லது. தலைவலியைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை, நரம்பு தொடர்பான பாதிப்புகளில், மருந்துகளை உட்கொள்ளும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. மன அழுத்தத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். எதிரிகள் பலமாக இருக்கக்கூடிய காலகட்டம் என்பதில் பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். எந்தொரு விஷயத்துக்கும் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். உங்களை நிறைய பேர் சீண்டிப் பார்ப்பதற்கான நேரமாக இருக்கும். ஆண்கள் பழக்கவழக்கங்களிலும், உறவுமுறைகளிலும் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதாரத்தில் நிறைய ஆசைகள் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவதொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சண்டை போட்டு காரியத்தை ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கோர்ட், கேஸ்கள் எளிமையாக முடியும். பெண்களால் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உறவினர்கள் போட்ட வழக்குகள் தீரும். அகோர வீரபத்திரரை மனதார வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.கும்பம் ராசி பலன்
கவனம்
கோபம் வேண்டாம்
வழிபாடு