லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. சொந்த வீடு, நிலம், திருமணம்னு செட்டிலாகப் போறீங்க

  • Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசியினருக்கு துணை விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் துணை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    அனுகூலம்

    கழுத்து, தோள்பட்டை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியிடத்தில், தொழில் இடத்தில், உத்தியோகத்தில், வியாபாரத்தில், பயணங்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அமைப்பு உள்ளது. சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும்.

    வீடு, நிலம் வாங்கும் யோகம்

    எல்லா காரியங்களிலும் வெற்றி ஏற்படும். மிகப்பெரிய மேன்மை ஏற்படும். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, கிரகப் பிரவேஷம் செய்வது போன்ற யோகம் உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வந்து சேரும் யோகம் ஏற்படும். திடீர் பண வரவு ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் புதன் இருப்பதால் கன்னி ராசியில் வரப்போகிறார்.

    Advertisement

    பாக்கியத்தில் சுக்கிரன்

    அடுத்த ஒன்றரை மாதத்திற்கு பிஸியாக இருப்பீர்கள். வேறு மாநிலத்துக்கு சென்று வரும் அமைப்புள்ளது. டிரான்ஸ்ஃபர்கள் ஏற்படும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். படிப்பு போன்ற விஷயங்களுக்கு சுபச் செலவு செய்வீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் 4 மாதங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். சுற்றுலா செல்லும் யோகம் ஏற்படும். சந்தோஷத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது.

    திருமண யோகம்

    பெரிய அளவுக்கு மாற்றங்களும், சந்தோஷமும் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் டிசம்பர் மாதத்தில் இருந்து கஷ்ட காலம், நரகத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். டிசம்பர், ஜனவரி மாதத்தில் திருமணம் நடக்கும் யோகம் உண்டு. ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது தடைகளை எல்லாம் தகர்த்தெறியும்.

    Advertisement

    95 மார்க்

    சுபகாரியத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, முதுகு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காமதேனு வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Kumbam Rasi Weekly Horoscope: Kumbam (Aquarius) natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.