பணக்கார யோகம் பெறும் மகர ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடப் போறீங்க

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மகரம் ராசி பலன்

    மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயிறு, இடுப்பு, பின்புறப் பகுதிகளில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். அப்பாவுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சண்டைகள், வாக்குவாதங்கள், புரிதல் குறைவு போன்றவை நிவர்த்தியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

    சொத்துக்கள் சேரும்

    10 ஆம் இடம் வலுவாக இருப்பதால் வேலை, தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். மனைவி சொத்துக்கள், கணவர் வீட்டார் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நன்மை பயக்கும். இரண்டாம் பாதி 14, 15, 16 ஆம் தேதி அற்புதமாக இருக்கும். இந்த காலங்களில் மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    அற்புதமான காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில் வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அடுத்த 18 மாதங்களில் குடும்பம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    அடுத்தடுத்து அதிர்ஷ்டம்

    ஜென்மத்தில் ராகு, 7 ஆம் இடத்தில் கேது வருவதால் கோளார் பதிகத்தை படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருப்பது நன்மை பயக்கும். நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். அடுத்த 18 மாதங்களுக்கு அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். ஐப்பசி மாதம் முதல் யோகம் பெறுவீர்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75, 91 ஆவது பாடல்களைப் படிப்பது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    வழிபாடு

    காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயிறு, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், படபடப்பு, குறை ரத்த அழுத்தம், நரம்பு பாதிப்புள்ளவர்கள் மிகுந்த கவனம் தேவை. வண்டிகளில் வேகமாக செல்வது, செல்போன் பேசிக் கொண்டே செல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. திங்கள்கிழமை தோறும் கணபதி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Magaram Weekly Rasi Palan for October 12–18 explores the week's expected benefits, career and financial prospects, remedies, worship practices, and areas requiring caution.