Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மகரம் ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி பெறக்கூடிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தூரப் பிரயாணங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 4 ஆம் தேதி வரை தொழிலில் பிரச்சனைகள் இருக்காது. 4 ஆம் தேதிக்குப் பிறகு பணம் எங்கேயாவது கொடுத்தால் திரும்ப வருவதில் பிரச்சனைகள் வரும். ஆடம்பரப் பொருள்கள் விற்பனை, சேலை விற்பனை, மேக்கப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு பணம் வருவதில் நிறைய பிரச்சனைகள் வரும். நிறைய வக்கிரம் பிடித்த மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரிய அளவுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வராது. பாக்கிய ஸ்தானம் வலுவிழந்து இருப்பதால் எந்த முயற்சிகள் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். லக்கினம், ராசிக்கு பலம் இருப்பதால் உங்களுக்குப் பெரிய வெற்றிகள் ஏற்படும். பயணங்களின்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனைவியின் பெயரில் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. தூர சொந்தத்தில் சில கெட்ட காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. கோளார் பதிகம் கேட்பது ராகு கேது தோஷத்தை போக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். கேது 8 இல் இருப்பதால் அசெளகரியங்கள் ஏற்படாமல் இருக்கவும், மனம் தெளிவாக இருப்பதற்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். பெற்றோர், பெரியோர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் தகராறு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரம், தொழில், உத்தியோகம், டிரேடிங், ஷேர் மார்க்கெட், வெளிநாடு, முதலீடு, ஏற்றமதி, இறக்குமதி என எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பெரிய இயந்திரங்களை வைத்து வேலை செய்பவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்க ஆர்டர்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது.மகரம் ராசி பலன்
பணம் கவனம்
வீடு, நிலம், சொத்து
உடற்பயிற்சி அவசியம்
வெற்றி மேல் வெற்றி
முன்னேற்றம்