Magaram: மகர ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. வக்கிர சனியால் வரும் அடிக்கும் ஜாக்பாட்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசியினருக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். ராசியதிபதி சனி பகவான் 3 ஆம் இடத்தில் வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். எழுத்து சம்பந்தப்பட்ட, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களையும் சமாளித்து முடிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    காலநிலைமைகள் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மன தைரியம் அதிகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சொத்து, வண்டி, வாகனம் போன்றவை அமைவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

    ஆரோக்கியம்

    குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு இல்லாமல் பாத்துக் கொள்ள வேண்டும். துணையுடன் மன வருத்தங்கள் வேண்டாம். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டம். விநாயகர் வழிபாடும், நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். கழுத்து வலி, முதுகு வலி, சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும்.

    Advertisement

    சாதகம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக ஏற்றங்கள் காணப்படும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வண்டி வாகன மாற்றங்கள் காணப்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்கள் பெரிய வெற்றியை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கக்கூடிய காலகட்டம்.

    வழிபாடு

    விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் ஆகும் யோகம் உண்டாகும். அடுத்த மாதத்தில் நிச்சயதார்த்தம் நடக்கும். உங்களுடைய இரண்டாவது குழந்தையால் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பிள்ளைகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இடம் விற்பது, வீடு விற்பது போன்ற யோகம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Magaram rasi people during this week of August 10 to 16.