Magaram: மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பொருளாதாரத்தில் செம ஏற்றம்!

  • Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடம் நன்றாக இருப்பதால் நிறைய பேருக்கு திருமணம் நடக்கும். மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில் சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். முயற்சிகள் தடைபட்டு தள்ளிப்போய் நடக்கும். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.

    சோர்வு, பயம்

    அஷ்டமத்தில் கேது இருப்பதால் எல்லா விஷயங்களிலும் சோர்வு ஏற்படும். பயம், கலக்கம், குழப்பம் ஏற்படும். கைக்கு வந்த விஷயங்கள் தள்ளிப்போய் நடக்கும். பாக்கிய ஸ்தானம் வலுவிழந்துள்ளது. பயணங்கள், பெரியவர்களின் ஆரோக்கியம், இடுப்பு, புட்டம், ஆசனவாய், முதுகுத் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வீடு, நிலம்

    பொறுமையாக இருந்தால் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய மாற்றங்களும், சந்தோஷமும் ஏற்படுத்தும். வீடு, நிலம், பதவி போன்றவற்றிற்கு முயற்சி செய்தால் தள்ளிப்போய் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள்.

    கோபம் வேண்டாம்

    வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். பெற்றோருக்கு சிறிய ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. அவர்களிம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.

    திடீர் அதிர்ஷ்டம்

    ராகுவால் திடீர் அதிர்ஷ்டமும், லாபமும் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் லாபம் ஏற்படும். முதலீடுளுக்கு குறைவிருக்காது. துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். துணையிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    எதிர்பாலினத்தவர் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். விநாயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷ 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Magaram (Capricorn) sign during the period from September 21 to September 27 (Purattasi 4 to 10).