Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எந்த விஷயத்திலும் அவரசப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும். வயிறு வலி, முதுகு வலி, கண் வலி போன்றவை சரியாகும். நீங்கள் முயற்சி செய்யும் விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். சூரியன் துலாமில் நீச்சமாவதால் பெரிய மாற்றங்கள் காணப்படும். இந்த வாரத்தில் வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். விருந்தாளிகள் வீட்டுக்கு வருவார்கள். புதிய அழைப்புகள் தேடி வரும். சொந்தபந்தங்கள் வாக்குவாதம் செய்தாலும் அதை ஆமாம் என்று சொல்கின்ற நிலைமை ஏற்படும். வாரத்தின் இறுதிப் பகுதியில் கால் முட்டியில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்கள் மேற்கொள்வீர்கள். வேலையில் அலைச்சல் ஏற்படும். இருப்பினும் அவற்றில் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். அஷ்டமத்தில் சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. தூய்மையான கழிவறையைப் பயன்படுத்துவது நல்லது. தோல் அலர்ஜி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பெண்களுக்கும் உங்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தில், மேலதிகாரிகள், கூட்டாளிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பாகச் சென்று வருவது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருக்காகவும் ஜாமீன் கொடுப்பது, கையெழுத்தை போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. 5 இல் குரு பார்ப்பதால் எந்த விஷயத்துக்கும் அச்சப்படத் தேவையில்லை. லட்சுமி கடாட்சம் உண்டாகும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். செல்வந்தர்களாகக் கூடிய யோகம் ஏற்படும். 18 மாதத்திற்கு யோகத்தைப் பெறும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதன்கிழமை தோறும் பைரவர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். நரம்பு, கண் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அனுமன் வழிபாடு மீனாட்சியம்மனை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அனுமன் சாலிஷா கேட்பது, அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.மீனம் ராசி பலன்
ஆதாயம்
முயற்சிகளில் வெற்றி
கவனம்
18 மாதம் அதிர்ஷ்டம்
வழிபாடு