Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மீன ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மீன ராசியினர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கழிவுப் பாதை தொடர்பான சிறிய பாதிப்புகளில் கூட உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகள், உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஜென்மசனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். வாகனங்கள் தொர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த மன தாங்கல்கள் நீங்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். தினந்தோறும் கோளார் பதிகம் கேட்பது சகலவித முன்னேற்றங்களையும் தரும். திடீர் அதிர்ஷ்ம், திடீர் லாட்டரி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற அற்புதமான யோகங்களைப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எதிரிகளை அசாரதாரணமாக எடை போடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணம், பொருளாதாரம், குடும்பம் தொடர்பான விஷயங்கள் எல்லாம் 27, 28, 29, 30 ஆகிய நாட்களில் அற்புதமாக இருக்கும். 29 ஆம் தேதி குழப்பமான மன நிலை இருக்கும். வயிற்றில் அல்சர், அசிடிட்டி, சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தூக்கமின்மை ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். புதிய தைரியம், உத்வேகம் பிறக்கும். குழந்தைகளுக்கு குடும்பத்தில் நிறைய பணம் வந்து சேரும். பிள்ளைகள் வாழ்க்கையில் செட்டிலாவர்கள். பிள்ளைகளுக்கு திருமணமாவது, வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும். தங்கம் வாங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சனி, சந்திரன் இணைவு இருப்பதால் ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்மைகளைத் தரும். பிரித்யுங்கரா தேவி வழிபாடு ஏற்றத்தைத் தரும்.மீன ராசி பலன்
உடற்பயிற்சி அவசியம்
வீடு, நிலம் வாங்கும் யோகம்
வெற்றி
வழிபாடு