“கிளைமேக்ஸ் இனிமேல்தான்!”.. மீனம் ராசிக்கு சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருகும்

  • Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினருக்கு அடுத்த இந்த வாரம் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் நிறைய பிரச்சனைகள், பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவிக்கு வயிறு சார்ந்த அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.

    கோபம் வேண்டாம்

    வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி சரக்கு கொடுத்தால் பணம் மாட்டிக் கொள்ளும் அமைப்பு உள்ளது. எந்த பொறுப்பாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்திற்கு தோற்கும் நிலை இருக்கும். எந்த விஷயத்திலும் அவசியமில்லாமல் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    குரு அருள்

    பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்வது பரிபூரண தெய்வ அனுக்கிரகத்தை கொடுக்கும். குழந்தைகளின் அரவணைப்பு கிடைக்கும். மற்றவர்களால் நிறைய குழப்பம் வரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தலை முதல் கால் வரை எலும்புப் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

    கவனம்

    ஜென்மத்தில் சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. வாக்கு ஸ்தானாதிபதியான செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதால் கவனம் தேவை.

    Advertisement

    முன்னேற்றம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஆச்சரியங்கள் ஏற்படும். நம்பிக்கை, பேராதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும்.

    வழிபாடு

    நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகக்கூடிய நல்ல காலகட்டம். வியாழக்கிழைமையில் விநாயகர், பெருமாள் தாயார் வழிபாடு நன்மையைத் தரும். கபாலீஸ்வரர் வழிபாடு, உக்கிர நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். யாரையும் நம்பி பணத்தை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சந்தோமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்மையைத் தரும்.

    English Summary

    Meenam Rasi Weekly Horoscope: Meenam (Pisces) natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.